புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (17:52 IST)

பாராட்டுகளைப் பெற்ற ஓ மை கடவுளே திரைப்படம்… இந்த சீரிஸில் இருந்துதான் காப்பி அடிக்கப்பட்தா?

இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வசூலையும் குவித்த ஓ மை கடவுளே ஒரு கொரியன் சீரிஸில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் வெளிவந்த அசோக்செல்வனின் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நான்காவது வாரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டினர். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்த இந்த படத்தின் ரிஷிமூலத்தை இப்போது சமூகவலைதள வாசிகள் கண்டுபிடித்துள்ளனர்.

’இந்த படம் 2012 ஆம் ஆண்டு வெளியான ஆபரேஷன் ப்ரபோஸல் எனும் கொரியன் சீரிஸில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி பரவியதும் இப்போது பலரும் அந்த சீரிஸை டவுன்லோட் செய்து பார்க்க ஆரம்பித்துள்ளனர்.