’இந்தி தெரியாது போடா’ டீசர்ட்: அடுத்த டார்கெட் சூர்யா, சிம்பு?
’I am a தமிழ் பேசும் இந்தியன் மற்றும் இந்தி தெரியாது போடா போன்ற வாசகங்களை கொண்ட டிசர்ட்ட்டுகளை திரையுலக நட்சத்திரங்கள் சமீபத்தில் அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே
ஆனால் அதே நேரத்தில் இந்த டீசர்ட்டுகளை ஆர்டர் கொடுத்து கனிமொழி என்றும் இந்த டி ஷர்ட்டுகளை டிசைன் செய்து கொடுத்தது திமுக நிர்வாகி என்றும் நேற்று ஊடகங்களில் செய்தி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மொழிப் பிரச்சனையை வைத்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வரும் திமுக, இந்த விஷயத்திலும் பின்னணியில் இருப்பது தெரிந்தும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
தொடர்ச்சியாக பொதுமக்கள் மொழிப்பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் நிலையில் இந்த முறை திரையுலகினரும் சிக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா, சாந்தனு உள்பட ஒரு சில நடிகர்களை அடுத்து சிம்பு மற்றும் சூர்யாவும் இந்த டீசர்ட் அணிந்து விரைவில் போஸ் கொடுக்கப் போவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் இது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது