வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (12:21 IST)

வாடிவாசல் படத்தின் சூப்பர் அப்டேட் இதோ – காணாமல் போன அருவா!

வாடிவாசல் படத்தில் சூர்யா அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

அசுரனின் இமாலய வெற்றி இயக்குனர் வெற்றிமாறனின் பக்கம் பெரிய நடிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவரிடம் ஷாருக் கான், சூர்யா, விஜய் ஆகியோர் கதைக் கேட்டுள்ளனர். இதில் சூர்யாவுக்கு அவர் சொன்ன கதை பிடித்துள்ளதால் அந்த படம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த வித்தியாசமான கூட்டணி ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

வரிசையாக நாவல்களை வைத்து திரைப்படம் எடுத்து வரும் வெற்றிமாறன், இந்த முறையும் வாடிவாசல் என்ற பெயரில் எழுத்தாளர் சி சு செல்லப்பா எழுதிய நாவலைதான் திரைக்கதையாக்கியுள்ளார். முதலில் அருவா படத்தில் நடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் நடிக்க இருந்த சூர்யா, இப்போது முதலில் வாடிவாசல் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். இதனால் அருவா படம் பின் தள்ளி செல்லும் என தெரிகிறது.

திரைக்கதை பணிகளை முடித்துள்ள வெற்றிமாறன் கொரோனா லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் சூர்யா அப்பா மற்றும் மகன் என இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜல்லிக்கட்டில் தன் தந்தையைக் குத்திக் கொல்லும் யாராலும் அடக்க முடியாத காரி எனும் காளையை மகன் அடக்குவதே கதையாகும்.