திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (07:29 IST)

50 சதவிகிதம் சம்பளத்தை குறைக்க ஒப்புக்கொண்ட சூர்யா-கார்த்தி நாயகி!

சூர்யா நடித்த ’என்ஜிகே’ கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ’தேவ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.  தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ மற்றும் கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரபல நடிகர் நடிகைகள் பலர் தங்களது சம்பளத்தை குறைத்து வருவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரகுல் ப்ரீத்தி சிங் தனது சம்பளத்தை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதுவரை ரகுல் ப்ரீத்திசிங் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது 75 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் திரையுலகைச் சேர்ந்த அனைவரிடமும், தன்னுடைய தயாரிப்பாளர்களிடமும் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்து திரையரங்குகள் திறந்தாலும் போதிய வசூல் வராது என்பதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சம்பளத்தை குறைத்து வருகின்றனர். ஏற்கனவே இயக்குனர் ஹரி, நடிகர் ஹரிஷ் கல்யாண் உள்பட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது சம்பளத்தை குறைப்பதாக அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது