முகமூடி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஜீவா இல்லையாம் – ஜஸ்ட் எஸ்கேப் ஆன நடிகர்!
2013 ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது நடிகர் சூர்யாதானாம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீவா, பூஜா ஹெக்டே, செல்வா உள்ளிட்டோர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முகமூடி. சூப்பர் ஹீரோ திரைப்படமான இதை 18 கோடி ரூபாய் செலவில் யுடிவி சார்பாக கோ தனஞ்செயன் தயாரித்து இருந்தார். ஆனால் இந்த படம் மோசமான திரைக்கதையால் பயங்கரமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. அதே போல வசூலும் சொல்லும்படியாக இல்லை என சொல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜீவா இல்லையாம். சூர்யா கதை கேட்டு ஒப்பந்தமாகி பின்னர் கதை பிடிக்காமல் கடைசி நேரத்தில் விலகிக்கொண்டார். இதை அந்த படத்தின் தயாரிப்பாளரான தனஞ்செயனே ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.