புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2020 (11:25 IST)

பணக்கட்டுகளைப் போர்வையாக்கி படுத்திருக்கும் நடிகை – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், எதிர்நீச்சல், எல்.கே.ஜி   உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம் மற்றும் சில ஹிந்தி படங்களில் கூட நடித்தார். ஆனால் எந்த திரையுலகிலும் முன்னணி நடிகையாக வரமுடியாமல் தனது இடத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் 2000 ரூபாய் பணத்தை போர்வையாக உடல் முழுவதையும் மறைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். இந்த புகைப்படம் ஏதாவது படத்துக்காக எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.