திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2018 (00:57 IST)

மூன்றே நாட்களில் ரூ.45 கோடியை நெருங்கிய 'தானா சேர்ந்த கூட்டம்

சூர்யாவின் படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சூப்பர் ஹிட் ஆகாத நிலையில் அவர் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விமர்சகர்கள், நெட்டிசன்கள் ஆகியோர் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்ததால் வசூலிலும் சாதனை புரிந்துள்ளது

இந்த படம் மூன்றே நாட்களில் சுமார் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ.2.28 கோடி வசூலான இந்த படத்தின் தமிழக மொத்த வசூல் ரூ.19.10 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் ரூ.5.3 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.9 கோடியும், கேரளாவில் ரூ.4.1 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.1.5 கோடியும், வெளிநாடுகளில் சுமார் ரூ.10 கோடியும் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது