திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (04:06 IST)

பொங்கலுக்கு மூன்றே படங்கள்: மீதி 7 படங்கள் என்ன ஆயிற்று?

வரும் பொங்கல் திருநாளில் தமிழில் மட்டும் மொத்தம் 10 படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின்' ஸ்கெட்ச்' மற்றும் பிரபுதேவாவின் ;குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்', அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', விமலின் 'மன்னார் வகையறா' உள்பட மற்ற படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படங்கள் ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பவன்கல்யாண் நடித்த 'அஞ்ஞாதவாசி', கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஜெய்சிம்ஹா உள்பட 12 மற்ற மொழி திரைப்படங்களூம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.