வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (22:27 IST)

சூர்யா படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

நடிகர் சூர்யா குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது தெரிந்ததே. சூர்யா நடித்துவரும் 'சூரரைப்போற்று' படத்திn தொழில்நுட்ப பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா நடிக்கவிருக்கும் 39 வது படம் மற்றும் 40வது படம் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
 
சூர்யாவின் 39வது படத்தை ஹரி இயக்க இருப்பதாகவும், சூர்யாவின் 40வது படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சூர்யா நடித்து முடித்திருக்கும் சூரரைப்போற்று என்ற படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியாகும் என்றும் இந்த டீசரில் இருப்பதாகவும் ’மாறா’ தீம் இசை இருக்கும் என்று இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சூரரைப்போற்று டீசர் என்ற ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.