1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (11:17 IST)

சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதிர்பார்த்த அதே தேதி தான்..!

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று முன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
முதலில், இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படமும் வெளியாவதால் ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படும் என்று கூறப்பட்டது.
 
தற்போதைய தகவலின்படி, ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், விரைவில் படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva