திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (15:54 IST)

ஷாருக் கான் படத்தில் சூர்யா?… தூம் 4 படத்தில் இணைந்ததாக தகவல்!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ஷாருக் கான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு கடந்த ஆண்டு மட்டும் மூன்று படங்களை ரிலீஸ் செய்து மூன்றையுமே ஹிட்டாக்கி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து அவர் அடுத்து ‘கிங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை முடித்ததும் அவர் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘தூம் 4’ படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் சூர்யா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.

தூம் வரிசை பாலிவுட்டில் பெரிய வெற்றியைக் குறித்த ஆக்‌ஷன் சாகசப் படமாகும். இதன் முதல் பாகத்தில் ஜான் ஆப்ரஹாமும், இரண்டாம் பாகத்தில் ஹ்ருத்திக் ரோஷனும் மூன்றாம் பாகத்தில் அமீர் கானும் கதாநாயகனாக நடித்தனர். மூன்று பாகங்களிலும் காவல்துறை அதிகாரி வேடத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருந்தார். இப்போது அந்த போலீஸ் வேடத்தில்தான் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.