ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (18:54 IST)

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அஜித் தற்போது ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’ ‘குட் பேட் அக்லி’ இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’. ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளிக்கும், ’குட் பேட் அக்லி’ பொங்கல் திருநாளுக்கும்ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வந்த தகவல்களின் அடிப்படையில், ‘விடாமுயற்சி’ படத்தின் தயாரிப்பு பணிகள் தாமதமாகி வருவதால், அந்த படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. மேலும், இந்த படம் கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வரலாம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளன.

’விடாமுயற்சி’ படம் தள்ளிப் போகுமானால், அஜித் நடிக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தின் ரிலீஸும் தள்ளிப் போகலாம் என செய்திகள் வந்தன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதியாக  இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆதிக் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ’குட் பேட் அக்லி’ அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே,   ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் எப்போது அறிவிக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்

Edited by Siva