பிப்ரவரியில் சிறுத்தை சிவா & சூர்யா பட ஷூட்டிங்!
இயக்குனர் சிறுத்தை சிவா பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவோடு ஒரு படத்தில் இணைய ஒப்பந்தம் ஆனார்.
சிறுத்தை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் சூர்யாவோடு ஒரு படத்தில் இணைய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
அதற்கான வேலைகளை இப்போது தொடங்கியுள்ள அவர் பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார்.