மாதவன் கெட்டப் பார்த்து ஷாக் ஆன சூர்யா… வைரலாகும் ராக்கெட்ரி ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ!
நடிகர் சூர்யா மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன். சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் கேன்ஸ் விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நடிகர் மாதவன் இந்த படம் ஜூலை 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் சூர்யாவும், இந்தி வெர்ஷனில் நடிகர் ஷாருக் கானும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது மாதவன் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ராக்கெட்ரி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் மாதவன் நம்பி நாராயணன் கெட்டப்பில் இருக்கும் மாதவனை பார்த்து ஷாக் ஆக, அவரை நம்பி நாராயணனிடம் தன்னுடைய நெருங்கிய நண்பர் சூர்யா என்று அறிமுகப்படுத்தி வைக்கிறார்.