வாலி ரீமேக் விவகாரம்… எஸ் ஜே சூர்யா தொடர்ந்த வழக்கில் வந்த முக்கிய தீர்ப்பு!
வாலி படத்தை ரீமேக் செய்ய போனி கபூர் அதன் தயாரிப்பாளரிடம் இருந்து ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்.
1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் வாலி. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா இப்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனராகவும் அறியப்படுகிறார்.
இந்நிலையில் வாலி படத்தை 22 ஆண்டுகள் கழித்து இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர், ஆனால் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக்கூடாது என்று வழக்கு தொடர்ந்திருந்தார் எஸ் ஜே சூர்யா. அந்த வழக்கில் ரீமேக் சம்மந்தப்பட்ட உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் வசமே உள்ளதாகவும், அதனால் அவரிடம் இருந்து முறைப்படி உரிமை பெற்றுள்ள போனி கபூர் ரீமேக் செய்ய எந்த தடையும் இல்லை கூறியது.
இதையெதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கின் விசாரணையின் போது “இந்த வழக்கு சம்மந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில் அதன் தீர்ப்பைப் பொறுத்து ரீமேக் உரிமையை இயக்குனர் கோரமுடியும்” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.