திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (19:43 IST)

''பொன்னியின் செல்வன் ''டீசர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்!

பொன்னியின் செல்வன் டீசரின் வெளியீட்டு விழா தஞ்சையில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் ராஜராஜ சோழன் ஆட்சி செய்தபோது தஞ்சை தலைநகரமாக இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை டீசர் வெளியீட்டு விழாவை தஞ்சையில் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என மணிரத்னமும் படக்குழுவினர்களூம் கருதியுள்ளனர்

இதனையடுத்து இந்த படத்தின் டீசரை தஞ்சாவூரில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இந்த டீசர் வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் இந்த விழாவில் லைகா நிறுவனர் சுபாஷ்கரண் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த டீசர் வெளியீட்டு விழாவில், படத்தின் நடித்த அத்ஹ நடிகர்களையும் அழைத்துள்ளதாகவும், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அழைத்துள்ளதாகவும்,  ஜூலை 12 ஆம் தேதி ஏ.அர் ரஹ்மான் வெளி நாடு செல்லவுள்ளதால், இதற்கு முன்பு டீசர் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இத்திரைப்படம் டீசர் வெளியீட்டுற்க்கு பின், பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழாவையும் நடத்தை மணிரத்னம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.