ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 1 ஜூன் 2022 (00:02 IST)

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பேன்- கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில்  நடிகர் கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில்,  நரேன், ஆகியோர்  நடிப்பில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் படம் விக்ரம்.

இப்படம் ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகவுள்ள  நிலையில்,  இப்படத்திற்கு  சிறப்புக் காட்சிகளாக  அதிகாலை 4 மணி, 8 மணி காட்சிகள் வெளியாக உள்ளது.

இப்படத்தின் புரமோஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில், கேரளாவுக்குச் சென்ற   நடிகர் கமல், அங்கு சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விக்ரம் படத்தைப் புரமோட் செய்தார். அதன்பிறகு நடந்த இன்னொரு புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

இதுவரை இருவரும் கதைகள் கேட்டு விவாதித்தாலும், கதைகள் சரியாக அமையாததால்  ஒருவரும் இணைந்து நடிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த விக்ரம் படம் வெளியான பின் இதைப் பார்த்த மம்முட்டி என்னுடன் இணைந்து நடிப்பார் எனத் தெரிவித்தார்.