திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (18:29 IST)

இளையராஜா பாடலை கேட்டு ரசித்த சூப்பர் ஸ்டார் !

தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மிகப்பெரும் ஆளுமையாக திகழ்பவர் இளையராஜா. ரஜினி, கமல் தொடங்கி இப்போதைய இளைய தலைமுறை நடிகர்கள் வரை பலரது படங்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ரிகர்சல் பணிகளுக்காக இளையராஜா கோவை செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, சாமி எதாவது வேலை இருக்குதா  என ரஜினிகாந்த் இளையராஜாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு இளையராஜா, என் பிறந்த நாளை முன்னிட்டு,  ஜூன் 2 ஆம் தேதி கோவையில் நடக்கும்   இசை நிகழ்ச்சிக்கு ரிகர்சல் நடந்து கொண்டிருக்கிறது. அங்குதான் செல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

உடனே ரஜினியுடன் அங்கு வருவதாகக் கூறியுள்ளார். பின்னர் இளையராஜாவின் காரில் ரஜினி ஏறிச் சென்றார்,. கோடம்பாகத்தில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவில் இளையராஜாவின் கம்போசில் அமைந்த 3 பாடல்கலைக் கேட்டுவிட்டு கைதட்டி ரசித்துச் சென்றார். இதனால் இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.