திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (09:18 IST)

மீண்டும் உயிர்பெறும் சந்திரமுகி 2…. தயாரிப்பாளர் மாற்றமா?

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் வேலைகள் தூசு தட்டப்பட்டுள்ளன. திரைக்கதை வேலைகளை இயக்குனர் பி வாசு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தை முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்திடம் கைமாறி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.