குக் வித் கோமாளிக்குப் போட்டியாக சன் தொலைக்காட்சியின் புது நிகழ்ச்சி!
குக் வித் கோமாளி போல நகைச்சுவையான நிகழ்ச்சி ஒன்றை தொடங்க உள்ளதாம் சன் தொலைக்காட்சி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 'குக் வித் கோமாளி புகழ் ஏற்கனவே அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் மணிமேகலை, ரம்யா பாண்டியன், அஸ்வின் மற்றும் சிவாங்கி ஆகியவர்களும் கவனம் ஈர்த்துள்ளனர்.
இந்நிலையில் இதுபோலவே ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க உள்ளதாம் சன் தொலைக்காட்சி. அதில் யுடியூப் சமையல் காரர்களை வைத்து பிரபல நடிகர் ஒருவரை வைத்து தொகுத்து வழங்க உள்ளதாம். இதன் மூலம் ரியாலிட்டி ஷோவில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்கும் முனைப்பில் உள்ளதாம் சன் தொலைக்காட்சி.