1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (19:48 IST)

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ஷகிலாவுக்கு இவ்வளவு சம்பளமா?

ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் ஷகிலாவின் சம்பளம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது 
 
‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சீசன்2 தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ஆதரவு ரசிகர்களால் கிடைத்து வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது நான்கு போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் வின்னராக விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் குக்-களில் ஒருவரான ஷகிலாவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் சம்பளம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது