சிவகார்த்திகேயன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் தொலைக்காட்சி
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.
விஷ்ணு விஷால் நடித்த ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கியவர் ஆர்.ரவிக்குமார். அடுத்ததாக, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தையும் சயின்ஸ் பிக்ஷனை அடிப்படையாகக் கொண்டுதான் எடுக்க இருக்கிறார் ஆர்.ரவிக்குமார்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவே இல்லை. அதற்குள் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கிவிட்டது. சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ‘காக்கிச்சட்டை’ படத்தையும் இந்த நிறுவனம்தான் வாங்கியது.