செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 4 மார்ச் 2020 (19:33 IST)

பிக்பாஸ் சுஜா வருணியின் அழகிய குடும்பம் - மனதார வாழ்த்தும் ரசிகர்கள்!

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி.  பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.

பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு ஆத்வைத் என பெயர் சூட்டினர். அழகிய குடும்பத்துடன் மட்டற்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வரும் சுஜா வருணி தற்போது தனது குட்டி மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவரது ரசிகர்கள் அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.