செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 4 மார்ச் 2020 (18:22 IST)

காதல் தீயே.... தாராள பிரபு ரொமான்டிக் வீடியோ பாடல் ரிலீஸ்!

பாலிவுட்டின் முக்கிய வளரும் நட்சத்திரமாக வலம் வரும் ஆயுஸ்மான் குர்ரானா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் விக்கி டோனர். விந்து தான விழிப்புணர்வு பற்றிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு விருதுகளையும் வாரி குவித்தது.

இதையடுத்து இந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யும் ஆர்வம் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் அதிகரித்தது. அந்தவகையில் தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக தடம் படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இந்த படத்தின் டைட்டில்  மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது.  அனிருத், ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின், மேட்லி ப்ளூஸ், பரத் ஷங்கர், ஊர்கா குழு, கபீர் வாசுகி மற்றும் இன்னோ கங்கா என மொத்தம் 8 இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். படத்தின்  இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரிக்கியுள்ள நிலையில் படம் வருகிற மார்ச் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ரொமான்டிக் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.