செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:35 IST)

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது சுதா கொங்கராவா? தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனம்!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது இயக்குனர் சுதா கொங்கரா என செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’ இந்த படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்து விட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்போது அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்துக்காக இரு தமிழ் இயக்குனர்களிடம் தன் வீட்டில் வைத்தே அவர் கதை கேட்டதாகவும், அதில் ஒரு இயக்குனர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் அந்த இயக்குனர் யார், அந்த படத்தைத் தயாரிக்கப்போகும் தயாரிப்பாளர் யார் என்ற விவரம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இணையத்தில் வலைபேச்சு என்ற சேனலில் அந்த இயக்குனர் சுதா கொங்கராதான் என்றும் அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தைத் தயாரிக்கப்போவது ஏஜிஎஸ் நிறுவனம் எனவிம் சொல்லியுள்ளனர். இந்த செய்தியானது அஜித் ரசிகர்களை ஏக குஷியாக்கியுள்ளது.