பிக்பாஸ் 4 வது சீசன் நிகழ்ச்சியில் திடீர் சிறிய மாற்றம்.....
ஐபிஎல் போட்டிகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இம்முறை நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நான்காவது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதில், நடிகை லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவார்கள் என தகவல்கள் வெளியானது.
கடந்த சீசன்களில் 16 போட்டியாளர்க்ள், 100 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தற்போது கொரோனா காரணத்தால் போட்டியாளர்கள் குறைக்கப்படுவதாகவும் நாட்களும் குறைக்கப்படும் என தெரிகிறது.
அநேகமாக 12 போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் 80 நாட்கள் நிகழ்ச்சிகள் நடக்கும் என தகவல்கள் வெளியாகிறது.