செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (20:12 IST)

நிர்வாண போஸ் கொடுத்த நடிகருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பிரபல நடிகர்  நிர்வாண போஸ் கொடுத்ததற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகிறது.

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ரண்வீர் சிங். சக பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனை சமீபத்தில் இவர் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் வெளியான 83 படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் வேடத்தை ஏற்று நடித்திருந்தார்.

சமீபத்தில், இவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த போஸுக்காக கவனத்தைப் பெற்றுள்ளார். பேப்பர் என்ற அந்த ஊடகத்துக்காக ரண்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இற்கு பாலிவுட் முன்னணி நடிகைகள்  மற்றும் நடிகர்கள் ரண்பீர் கபீருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், ரண்பீருக்கு சிலர் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில், லைகர் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா அப்படத்தின் போஸ்டருக்காக நிர்வான புகைப்படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.