புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (15:03 IST)

நட்சத்திர கலைவிழா : ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் பங்கேற்பு

நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் பங்கேற்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழாவை நடத்த இருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம். ஜனவரி 6ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய்  ஆகியோர் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நட்சத்திரக் கலைவிழாவுடன், நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பிரபலமான புகித் ஜலீல் அரங்கத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த அரங்கில், சுமார் 80 ஆயிரம் பேர் வரை அமர்ந்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.