1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 நவம்பர் 2017 (20:18 IST)

நட்சத்திர கலைவிழா: விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த நாசர்

நட்சத்திர விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று, விஜய்யிடம் நேரடியாகச் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார் நாசர்.
 
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்ட, ஜனவரி முதல் வாரத்தில் மலேசியாவில் நட்சத்திர கலை நிகழ்ச்சியும், நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டால்தான் நிறைய ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் என்பதால், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்களாம் நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள்.