திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (11:52 IST)

“ஸ்ரீதேவி தான் இன்ஸ்பிரேஷன்” – ஜனனி ஐயர்

ஸ்ரீதேவி தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என நடிகை ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.

 
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. சினிஷ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹாரர் த்ரில்லர் படமான இதில், ஜனனி ஐயர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 1980களில் நடப்பது போல்  வருகிறதாம்.
 
“80களில் யார் மிகப் பிரபலம் என்பது எல்லோருக்குமே தெரியும். அதுவும் ‘மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவி மேடம் கேரக்டர் தான்  இந்தப் படத்துக்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. படம் முழுக்க பாவாடை, சட்டை தான் அணிந்து நடித்துள்ளேன். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளன” என்கிறார் ஜனனி ஐயர்.
 
பலூன் விற்பவரான ஜெய்யைக் காதலிப்பவராக நடித்திருக்கிறாராம் ஜனனி ஐயர். குளிர்ப் பிரதேசமான கொடைக்கானலில்  ஷூட்டிங் என்பதால், ஷூட்டிங் நடந்த ஒவ்வொரு நாளையும் சந்தோஷத்துடன் கொண்டாடியிருக்கிறார்.