செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (18:41 IST)

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடித்த சுமோ என்ற திரைப்படம், 2019 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில், சில பிரச்சினைகள் காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில், இப்போது படத்தின் ரிலீஸ் தகவல் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ், சுமோ என்ற படத்தை பிரமாண்டமாக தயாரித்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, அக்டோபர் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக வேல் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹோசிமின் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் உருவான இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோசினோரி தசீரோ, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Edited by Siva