திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (14:38 IST)

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே மே மாதம் தொடங்கி ஐதராபாத்தில் சில நாட்கள் நடந்து முடிந்தது. அதன் பின்னர் கடந்த சில வாரங்களாக மீண்டும் நடந்த அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.

படத்தின் ரிலீஸ் பொங்கல் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க அர்ஜுன் தாஸ் தற்போது இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே படத்தில் சுனில், த்ரிஷா மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.