தனது குழந்தைப் பருவத்தைப் படமாக எடுக்கும் ஸ்பீல்பெர்க்!
ஸ்பீல்பெர்க் அடுத்ததாக தனது குழந்தைப் பருவக் காலத்தை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
உலகெங்கும் தன்னுடைய ஜாஸ் மற்றும் ஜுராசிக் பார்க் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களைக் குவித்தவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கிவரும் இவர் இப்போது தன்னுடைய குழந்தைப் பருவ சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படத்துக்கான திரைக்கதையை எழுதி வருகிறாராம். இந்த படம் 1960 களில் அரிசோனா மாகாணத்தில் நடப்பது போல உருவாக்கப்பட உள்ளது.