1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (07:47 IST)

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்ச ரூபாய்: மசோதாவில் கையெழுத்திட்ட அதிபர் ஜோபைடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்தலின்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் அவர்கள் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்திற்கும் ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
 
இந்த வாக்குறுதியின் அடிப்படையில் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா நூலிழையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் ஒரு லட்சம் தரும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கையெழுத்திட்டார். இதனை அடுத்து இந்த மசோதா தற்போது அமலுக்கு வந்துள்ளது 
 
இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்காவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியில் உச்சகட்டத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா காரணமாக மொத்தம் அமெரிக்காவுக்கு 2 டிரில்லியன் டாலர் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது