திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (12:42 IST)

தமிழக முதல்வரை சந்தித்த ரஜினியின் மகள்!

தமிழக முதல்வரை சந்தித்த ரஜினியின் மகள்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சற்றுமுன் சந்தித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
ரஜினியின் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் 'Hoote' என்ற செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலி குரல்வழி மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட சமூக வலைதளம் என்பதும் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்த உடன் ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியை தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் இந்த செயலியை விவரிக்கும் வகையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை செளந்தர்யா ரஜினிகாந்த் சந்தித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  அவர்களை சந்தித்து '  Hoote’   App.ஐ  பற்றி விவரித்து , அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.