திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (12:30 IST)

அந்த மூணு பேரு தான் மாஸ்: சூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

காமெடி நடிகர் சூரி சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் நடித்தார் என்பதும் அந்த படம் நல்ல வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்தது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து அவர் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ’தலைவர் 168’ படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே நேற்று பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த படம் குறித்து நடிகர் சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் ஒரே ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் கனவாக இருந்ததாகவும், ஆனால் அவருடன் படம் முழுவதும் நடிக்கும் வாய்ப்பைப் தற்போது பெற்றுள்ளதாகவும் அதற்காக தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடக்கம் முதலே வெற்றியுடன் தொடங்கும் ஒரு நிறுவனம் என்றும், இந்த நிறுவனத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தால் உலக அளவில் பிரபலம் ஆகி விடுவோம் என்றும் ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தை தொடர்ந்து ’தலைவர் 168’ படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குனர் என்றால் அது சிவா தான் என்றும் சிவா இயக்கத்தில் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவருடன் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் சிவா ஆகிய மூன்று பேர் மட்டுமே மாஸ் என்றும் மூன்று மாஸ் இணையும் இந்தப் படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பது மிகுந்த சந்தோஷம் என்றும் இந்த படம் நிச்சயம் பட்டையை கிளப்பும் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்