வெங்கட்பிரபு, சினேகா படத்தின் டைட்டில்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

sneka
வெங்கட்பிரபு, சினேகா படத்தின் டைட்டில்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
siva| Last Modified புதன், 15 செப்டம்பர் 2021 (20:18 IST)
வெங்கட் பிரபு மற்றும் சினேகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
இந்த படத்திற்கு ஷாட்பூட் 3’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சினேகா மற்றும் பிரசன்னா இணைந்து நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் அவரது சகோதரர் ராஜேஷ் வைத்தியநாதன் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அருண் வைத்தியநாதன் தனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால் ஏ.ஆர். ரகுமான் தனது நண்பருக்காக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :