அச்சமுண்டு அச்சமுண்டு இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு!

mahendran| Last Modified செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:02 IST)

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானர் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.

பிரசன்னா மற்றும் சினேகா நடிப்பில் உருவான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன். அந்த படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி பேசியது. அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கினாலும் பெரிதாக கவனம் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் குழந்தைகள் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். நான்கு குழந்தைகள் பிரதானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளார்.



இதில் மேலும் படிக்கவும் :