புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:31 IST)

லண்டனுக்கு பறக்கும் சிவகார்த்திகேயன் படக்குழு! முக்கிய அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் SK20 படத்தின் காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.