வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (11:53 IST)

அண்ணனுக்கு ஒரு செல்போன் பார்சல்!! மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்; வைரலாகும் வீடியோ

நிகழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை சிவகுமார் மீண்டும் தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு மதுரையில் நடந்த விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது செல்பி எடுக்க வந்த இளைஞர் ஒருவரின் செல்போனை அவர் தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு கோரிய நடிகர் சிவகுமார் செல்போனை தட்டிவிட்ட இளைஞருக்கு புதிய செல்போனையும் வாங்கிக் கொடுத்தார்.
 
இந்நிலையில் இயக்குனர் ஒருவரின் இல்லத்திருமண வரவேற்பு விழாவிற்கு சிவகுமார் சென்றிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு இளைஞர் செல்பி எடுக்க முற்பட்டார். வேகமாக நடந்து வந்த அவர் சடாரென செல்போனை தட்டிவிட்டு ஒன்றும் தெரியாதது போல செல்கிறார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.