வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (13:27 IST)

கொடியா!! எனக்கேவா!! அசால்ட் அதிகாரியின் சர்ச்சை செயல்

கொடியேற்ற நிகழ்வின்போது அரசு அதிகாரி ஒருவர் செல்போனில் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நாடு முழுவதும்  70 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது அதிகாரி இப்ராஹிம் பொறுப்பற்று  செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகவே இந்த அதிகாரிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.