திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 ஜனவரி 2019 (20:02 IST)

பழைய செல்போனை வாங்குபவர்களுக்கு காவல்துறை ஆணையரின் வேண்டுகோள்

விலை மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக பழைய செல்போன்களை வாங்குபவர்களுக்கு மயிலாப்பூர் காவல்துறை ஆணையார் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சென்னையின் கடந்த சில மாதங்களாக காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட செல்போன்களை அவற்றின் ஐ.எம்.இ.ஐ. எண்களை வைத்து மொபைல் நெட்வொர்க் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த துணை ஆணையர் மயில்வாகனன் அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஒருசிலர் திருட்டு செல்போன்களை கைமாற்றி குறைந்த விலைக்கு விற்று வருவதால், பழைய செல்போன்கள் வாங்கும்போது உரிய ஆவணங்களை பார்த்து வாங்க வேண்டும்.

பழைய செல்போன்களை விற்பனை செய்ய வருபவர்களிடம் புகைப்படத்துடன கூடிய ஆதாரம் ஒன்றை வாங்கிய பின்னரே அந்த போனை விலைக்கு வாங்க வேண்டும் என்று பழைய செல்போன்களை விற்பனை செய்பவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்' என்று கூறினார்.