வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:39 IST)

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கலக்கும் டாக்டர் திரைப்படம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் தமிழிகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

டாக்டர் படத்தின் கடைசி நேரத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை தீர்க்க சிவகார்த்திகேயன்தான் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். ஏற்கனவே வேலைக்காரன், சீமராஜா மற்றும் ஹீரோ ஆகிய படங்களின் தோல்வியால் பல கோடிகள் கடனாளி ஆனார் சிவகார்த்திகேயன். இந்த கடன்களை அடைப்பதற்காக கே ஜே ஆர் ராஜேஷுக்கு சம்பளம் வாங்காமல சில படங்களை நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து ஒரு படமாக அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி டாக்டர் ரிலிஸ் ஆகியுள்ளது.

இந்த படம் வெளியானதில் இருந்து இப்போது வரை நல்ல வசூலை குவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின்னர் வெளியான படங்களில் டாக்டர் மட்டுமே நல்ல வசூலைக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இல்லாமல் இப்போது ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் வசூலைக் குவித்து வருகிறது.

கர்நாடகாவில் கிட்டத்தட்ட 9 கோடியும், ஆந்திராவில் சுமார் 6 கோடியும் வசூலிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது வரை சிவகார்த்திகேயன் படங்கள் செய்த வசூலை  விட இது மிகவும் அதிகம்.