சிவகார்த்திகேயனோடு மோதும் அருண் விஜய்யின் யானை!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சூரி மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள டான் திரைப்படம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே நாளில் அருண் விஜய் நடிப்பில் கமர்சியல் இயக்குனர் ஹரி இயக்கியுள்ள யானை திரைப்படமும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.