புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (10:16 IST)

லாக்டவுனுக்குப் பின்னர் முதல் தியேட்டர் ஹிட்… ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

மலையாள சூப்பர் ஸ்டார் மகன் ப்ரணவ் மோகன்லால் நடித்த ஹ்ருதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

மலையாள நடிகர் மோகன் லாலின் மகன் பிரணவ் நடிப்பில் நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் இயக்கியுள்ள ஹ்ருதயம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் தமிழ்நாட்டில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படம் லாக்டவுனுக்கு பிறகு மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவிக்கும் படமாக மாறி வருகிறது.

கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு வரவேற்புக் கிடைத்த நிலையில் இப்போது அந்த படத்துக்கான திரைகளை அதிகமாக்கி வருகின்றனர். சிறுநகரங்களில் கூட இந்த படத்தினை ரிலிஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.