1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (15:08 IST)

வெளியானது மஹான் படத்தின் டீசர்!

விக்ரம் மற்றும் துருவ் நடிக்கும் படமான மஹான் படத்தின் டீசர் இன்று காலை வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடித்த ‘மஹான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு அன்று படத்தின் டீசரை வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஆனால் அப்படி எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று மஹான் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. டீசரில் காந்திபோல மஹானாக வாழவேண்டும் என தந்தையால் அறிவுறுத்தப்படும் விக்ரம் எப்படி ரவுடியாக மாறி தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வாழ்கிறார் என்பதே கதை போல தெரிகிறது.