செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (15:18 IST)

சிவகார்த்திகேயனின் கடனை மொத்தமாக அடைக்கும் நேரம் வந்தாச்சு… முன்னணி நிறுவனத்துக்கு ஓகே!

சிவகார்த்திகேயன் படங்கள் தொடர்ந்து நன்றாக ஓடினாலும், அவர் மேல் பல கோடி ரூபாய் கடன் தொகை உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சில படங்கள் தோல்வி அடைந்ததால் பல கோடி ரூபாய் கடனாளி ஆனார். அந்த தொகையை அவர் நான்கு தவணையாக கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதில் ஒரு தவணையை மட்டுமே சிவகார்த்திகேயன் கொடுத்ததாகவும், அடுத்தடுத்த தவணைகளை கொடுக்காததால் பணம் கொடுத்தவர்கள் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸின் போது இது சம்மந்தமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் நேரத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மொத்த கடனையும் ஏற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரை வைத்து 3 படங்களை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படங்களுக்கு அவருக்கு சம்பளம் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.