செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (18:32 IST)

புரோ நீங்க தான் ரியல் ஹீரோ அஷ்வினை பாராட்டிய சிவகார்த்திகேயன்

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன் டுவீட் பதிவிட்டுள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. முதலாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

அதிகபட்சமாக அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல்  டெஸ்டில் இந்தியா இங்கிலாந்து அணியுடன் தோற்றது. எனவே இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர் சன் இங்கிலாந்து புகழ்ந்து இந்திய அணியைக் குறைத்து மதிப்பிட்டிருந்தார்.  தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணியின் பி டீமை தான் வென்றுள்ளது எனச் சீண்டியுள்ளார்.

இந்த வெற்றியை இந்திய அணி வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அஸ்வின் இந்த வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார் அவர்  தனது பேட்டிங்கால் எதிரணியைத் சிறடித்து சதம் அடித்ததுடன், எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அஷ்வினை பாராட்டி ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், புரோ நீங்கள் உண்மையான ஹீரோ.. இந்த வெற்றி எப்போதும் நினைவுகூறப்படும்…மேலும் உங்களிடம் நிறைய எதிர்பார்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அஷ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில், ’’நான் இப்போதும் இப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த இயலவில்லை; மைதானத்தில் குழுமியிருந்த  கிரிக்கெட் ரசிகர்கள் என்னை ஒரு ஹீரோவாக உணர வைத்தனர். சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.