செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (12:32 IST)

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல தெலுங்கு இயக்குனரா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும் அவர் தற்போது அயலான் மற்றும் டாம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்கயிருப்பது பிரபல தெலுங்கு இயக்குனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான தெலுங்கு திரைப்படம் ’ஜாதி ரட்னலு’. இந்த திரைப்படத்தை இயக்கிய அனுதீப்  என்பவர்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாக இருப்பதாகவும் முழுக்க முழுக்க காமெடி படம் என்றும் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற கேரக்டர் என்றும் கூறப்படுகிறது இந்த படத்தை பிரபல தெலுங்கு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படம் கொடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது