சிவகார்த்திகேயன் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் அயலான் ஆகிய துறைகளில் திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவான வாழ் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருவி என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாழ். இந்த திரைப்படம் சோனி ஓடிடியில் ஜூலை 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் டிரைலரையும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோனி ஓடிடி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த ஓடிடியில் பல நல்ல தமிழ் படங்கள் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் வாழ் திரைப்படமும் அனைவரையும் திருப்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது